Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Wednesday, July 8, 2020

நீயும் நானும்

கண்ணில் நீர் ஏனோ? 
காரணம் தான் என்னவோ!?

நெஞ்சில் நீ இருப்பதால்,
நினைவலைகள் தான் இழுக்குமோ?

பாசம் நான் வைத்ததால்,
பாவமாக நிற்கிறேன்.

அன்பு நாம் கொள்ள,
அறியாதோர் என் செய்வார்? 

தங்கையாய் தாயாய் தோன்றினாய்,
தந்தைப்போல் தந்தப்பாசம் தெரியலையோ?

அண்ணா என்றழைத்த குரல்,
அமைதியாக அழுகுதம்மா!!!

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Friday, May 1, 2020

நம் சார்பியல்

காத்திருந்தேன் பல மணி நேரம்,
நீ சொல்லும் சில வார்த்தைக்காக.
பார்த்திருந்தேன் பல மணி நேரம்,
நீ காட்டும் கள்ளமில்லா பாசத்திற்காக.
விழித்திருந்தேன் பல மணி நேரம்,
நீ விழி மூடி கண்ணுறங்க.
மௌனித்திருந்தேன் பல மணி நேரம்,
நீ மௌனத்தை கழைப்பாயென்று.
எதிர்பார்த்திருந்தேன் பல மணி நேரம்,
நீ வந்துவிட மாட்டாயாயென்று.
....
பல மணி நேரமும், சில நொடியானது, 
உன் நினைவுகள் மனத்திரையில் ஒளிப்பரப்பானதால். 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 28, 2020

என் (கவிப்)பயணம்

காகிதத்தில் கிருகினேன்,
கவிதைகள் பல எழுதினேன்.
காகிதங்கள் கடந்துவிடும்,
கவிதைகள் நம்மோடு கலந்துவிடும்.
காதல் வந்தால் கவிதை வரும்,
கொஞ்சம் காத்திருந்தால் கவிதை பொங்கும்.
முதல் கவிதை தேர்வு தாளில்,
தொடரும் நான் வாழும் நாளில்.

ரம்யமாய் கவிதை வேண்டி,
அட்சயா பாடி ஆட அதுதொடர,
சோகமும், சோர்வும், 
பழியும், பாவமும் கடந்து
வருவேன் எழுவேன்,
பாசமும், பறிவும், 
ஊக்கமும், உண்மையும்,
தேக்கமும், தெளிவும்,
வருமா‌ வருமா என பறக்க நினைத்து,
மறத்துப்போன கவிதையாக,
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்,
என் தம்பி எனும் படைக்காக்க,
என் தன்னம்பிக்கை உயிர்பெற்று உயர,
மோலு எனும் மேலுலக தேவதை,
விண்ணிலிருந்து வந்து விதி மாற்றி,
என்னிலிருந்து எனை மாற்றினால்.

(தன்யா) தனியாய் புரிந்தது பலர் பாசம்,
பெரிதாய் தெரிந்தது பலர் தியாகம்,
பதினெட்டாம் படிக்காரன் படியளக்க,
பதினெட்டை பெற்று பழையதை பாதுகாக்க,
பதினெட்டில் கிடைத்த பக்குவ பைங்கிளி,
அமைதியாய் ஆனால் அம்முவாய்.

தொடர்கிறது கவிதை,
கரோனா கொடுத்த விடுப்பு
கற்று தரும் உலகில் பல பொறுப்பு.

-இராமகுரு ராதாகிருஷ்ணன்

Friday, April 24, 2020

மகளாய் பிறப்பாய்!!!

மகளாய் பிறப்பாய், 
என் பெண்ணே உன்னைகாண.
மகளாய் பிறப்பாய், 
உன் புன்னகையில் பசியாற.
மகளாய் பிறப்பாய், 
என் மடியில் நீ உறங்கிட. 
மகளாய் பிறப்பாய், 
உன் மழலை சொல் கேட்டிட. 
மகளாய் பிறப்பாய், 
உன்னை என் மார்பில் வளர்த்திட.
மகளாய் பிறப்பாய், 
உன் பள்ளிப்பாடம் கேட்டிட.
மகளாய் பிறப்பாய், 
என் சாதனைகளுக்கு சாட்சியாய்.
மகளாய் பிறப்பாய், 
நீ பெண்ணாய் பூத்திட.
மகளாய் பிறப்பாய், 
உன்னை மனமேடையில்  ஆசிர்வதிக்க.
மகளாய் பிறப்பாய்,
நம் மனதோடு பேசிட.
மகளாய் பிறப்பாய், 
உன் குழந்தைகளை கொஞ்சிட.
மகளாய் பிறப்பாய்,
உன்னை சாதனை மங்கையாய் காண.
மகளாய் பிறப்பாய், 
எனக்கு இரு சொட்டு கண்ணீர்விட. 
மகளாய் பிறப்பாய், 
உன் மகனாக நான் பிறக்க. 
மகளாய் பிறப்பாய் மகளே!!!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 14, 2020

நாயர் சாரே

ஞாயிறாய் இருந்த நாயர் சாரே,
எங்கள் ஞான குருவே நாயர் சாரே,
பிள்ளைப்போல் பார்த்தாய் நாயர் சாரே,
காட்டிய வழியே சென்றோம் நாயர் சாரே,
வழி எங்கும் துணைநின்றாய் நாயர் சாரே,
விழி நீரை துடைத்திட்டாய் நாயர் சாரே, 
வாழ்க்கையை கற்றுத் தந்தாய் நாயர் சாரே, 
பலர் இன்று வாழ்வதும் உன்னாலே நாயர் சாரே, 
பெற்ற பேரெல்லாம் உனதாகும் நாயர் சாரே, 
எங்களை விட்டு எங்கு சென்றாய் நாயர் சாரே, 
ஏக்கங்கள் தீரவில்லை நாயர் சாரே,
என்றாவது நீ வருவாயா நாயர் சாரே??? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Sunday, April 12, 2020

பதினெட்டு - ஈரொன்பது

பதினெட்டாம் படித்தொட்டு
பதினெட்டை நான் பாட,
பதினெண் கீழ்க்கணக்கில் பாடினார் பெரும்புலவர்.
பதினெண்யென்றால் ஜெயா (ஜெயம்),
பதினெட்டை கொண்ட
பதினெட்டு காலயுத்ததை
பதினெட்டாய் பாடினார் புலவர்.
பதினெட்டே நம்மேனி,
பதினெட்டு மலையாளும் 
பதினெட்டு சித்தர்கள் அருள
பதினெட்டை நான் பெற்றேன்
பதினெட்டில் நீ பிறந்ததாலோ !!!   

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

Saturday, April 11, 2020

ஆராரோ ஆரிரரோ

என் பிள்ளை கண்ணுறங்க ஆராரோ 
என் பாட்டுக்கு கண்ணுறங்க ஆராரோ 
நாளையும் நமதேன்று ஆராரோ
நல்ல நாளும் நமதேன்று ஆராரோ
கவலைகள் மறந்துறங்க ஆராரோ
கனவுகள் கண்டுறங்க ஆராரோ 
வலிகளை மறந்துறங்க ஆராரோ
வழியொன்று வருமென்றுறங்க ஆராரோ
சிறுப்பிள்ளைபோல் சிரித்துறங்க ஆராரோ
உலகம் உனதென்றுறங்க ஆராரோ
செல்வங்கள் பெரிதல்ல ஆராரோ
சேர்க்கும் சொந்தங்களே ஆராரோ
நான் இருக்க நீயுறங்க ஆராரோ
நீ இல்லாமல் நானெங்கு போவேனோ?! 

போனது போகட்டும் ஆரிரரோ 
என்றும் போர் குணம் வேண்டாம் ஆரிரரோ
வாழ்வதும் ஓர் வாழ்கை ஆரிரரோ
பிறர் வாழ விழலாம் ஆரிரரோ
சொத்துன்ன சுகமேன்ன ஆரிரரோ
சிரிப்புக்கு விலையுண்டா ஆரிரரோ
சித்திரம் பேசுமடீ ஆரிரரோ
என் சித்திரம் நீதானே ஆரிரரோ
பக்குவம் வேண்டுமடீ ஆரிரரோ
பாதுகாக்க பழகிக்கொள் ஆரிரரோ
சிக்கனம் சிறுமையல்ல ஆரிரரோ
சிந்திக்க மறக்காதே ஆரிரரோ
நீ இருக்க நானுறங்க ஆரிரரோ
நான் இருக்க நீ எங்கும் போவாயோ? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 7, 2020

நாயர் சார்

சிந்திக்க கற்றுதந்தாய்
சிறகடித்துப் பறக்க சொல்லித்தந்தாய்,
எண்ணங்களே உயர்வுயென்றாய்,
கற்றதை கற்பிக்க சொன்னாய், 
கற்பித்தலும் கற்றலாகுமேன உணர்தினாய்,
வாடி நின்ற போது, வாசல் வந்தாய், 
தேடி நின்றோர்க்கு தோல்களை தந்தாய்.


- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

Monday, April 6, 2020

தனி-யா ?

உன் பாசம் எனக்கு புரியாமல் இல்லை,
என் பாசம் உனக்கு கிடைகாமலும் இல்லை

அப்போது இருந்து எனக்கு,
இப்போது போல், உன்னிடம்
பாசத்தை காட்ட தெரியவில்லை!!!

இப்போது இருக்கும் உனக்கோ
அப்போது போல், என்னிடம்
பாசத்தை காட்ட விருப்பமில்லை!!!

நீ துடைத்த என் கண்ணாடிக்கும்,
நான் தந்து 
நீ அணிந்திருந்த அந்த சங்கிலிக்கும், 
நம் பாசம்
தெரியும்,
புரியும்,

நான் தனி-யா?
உன் நினைவுகள் உள்ளவரை தனி இல்லை
என் தன்யா !!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

அண்ணாவின் அம்மூ

 பலருக்கு நான் மற்றுமொரு அண்ணன்,
 பாடும் உனக்கோ நான் ஒரே அண்ணன்.
 உணவுகளால் இணைந்த நம் உறவு,
 உணர்வுகளால் இன்று வளர்ந்த உறவு.
 "சாப்டேன் , நீ சாப்டியா?", என்று
 நீ கேட்காமல் கழிவதில்லை பொழுதும்,
 உன்னிடம் நான் செய்வதை சொல்லாமல்,
 இருந்ததில்லை ஒரு பொழுதும்.
 பிறருக்கோ நீ என் தங்கை - இந்தக் கவி
 பாடும் எனக்குத்தான் தெரியும் நீ "என் மகளேன்று"!!!

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

 

Wednesday, April 1, 2020

அம்மூ


அமைதியான அழகி
ஆடம்பரமில்லா அசல்
இயல்பான இனியாள்
ஈடுயில்லா இயற்கையாள் 
உண்மையான உறுதுணை
ஊக்க மருந்தானா உனக்கு
என்றும்
ஏறுமுகமே 
ஐயமில்லா அதிர்ஷ்டகாரி 
ஒப்பில்லா நீ
ஓட்டம் நிற்காமல் ஒளிர்வாய் 
ஔவை துணை நிற்பாள்
அம் மூ 
அஹ அஹ !!!!!

- அண்ணா (இராமகுரு ராதாகிருஷ்ணன்)

Friday, September 14, 2018

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்


வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்

நின்னுடன் அன்பு சண்டையிட

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

நின் பாச மழையில் நினைய

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

என் அன்புக்காக நீ ஏங்கிருந்தால்

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

புரியாத என்னை புரியவைக்க

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

வேகமாய் சென்ற வாழ்வை திரும்பி பார்க்க

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

உணராத தியாகத்தை உணர

வருகிறேன் இன்னுமொரு ஜென்மம் இருந்தால்...

இனி ஒரு ஜென்மம் வேண்டாம் என்றிட

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

Wednesday, April 12, 2017

என் தங்கை

எங்கிறந்தோ வந்தால் - என் வாழ்வில்,
ஏணியாய் இன்று,
என் கனவை சுமக்கும்
தாயாய் இன்று,
கவலைகளை காற்றாய்
கருணையை ஊற்றாய்
அளவற்ற அன்பை ஆறுபோல்
குறைவற்ற குனவதியாய்
பிரியமுடன்
த்தீ.

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 



Sunday, July 5, 2015

எண்ணங்களின் எழுச்சி

எண்ணங்களின் எழுச்சி

ஏக்கங்கள் நிறைந்தது
தூக்கங்கள் தொலைந்தது

எண்ணங்கள் எழுந்தது
என்னிலே நுழைந்தது

தவறுகள் தவித்தது
தவங்கள் தவழ்ந்தது

வேகம் குறைந்தது
விவேகம் வளர்ந்தது

தெளிவுகள் தெளிந்தது
தேவைகள் மறைந்தது

நிம்மதி விளைந்தது
நிழல்போல் நின்றது

-இராமகுரு

Saturday, June 7, 2014

மனம் - வருமா வருமா

வருமா வருமா விடியல்  வருமா
ஒருநாள்ஒருநாள் விடியல்  வருமா

வருமா வருமா ஒருநாள் வருமா
விடியல் விடியல் ஒருநாள் வருமா

காலத்தினால் வந்த மாற்றத்தினால் 
முயற்சியினால் வரும் மாற்றத்தினால் 

வருமா வருமா விடியல்  வருமா
ஒருநாள்ஒருநாள் விடியல்  வருமா

வருமா வருமா ஒருநாள் வருமா
விடியல் விடியல் ஒருநாள் வருமா

உன் மனம் என்றுமே அரிதானது
அதை புரியாதது பெரும் பிழையானது
உன் மனம் போலவே 
உன் வாழ்வும் மாறி விடுமே

மனதோடு என்றும் ஆற்றல் உள்ளது 
மனதார செய்தால் மாற்றம் உள்ளது

முடியும் முடியும் உன்னால் முடியும்
மனதால் நினைத்தால் எல்லாம் முடியும்

வந்தால் வந்தால் விடியல் வந்தால் 
உலகம் முழுதும் உந்தன் பின்னால்

விடியும் முன்னே விழித்திடு நீ !
விடியலுக்காக உழைத்திடு நீ !

வருமே வருமே விடியல் வருமே 
ஒருநாள் ஒருநாள் நிஜமாய் வருமே

வருமே வருமே விடியல் வருமே 
நிஜமாய்  நிஜமாய் ஒருநாள் வருமே

வருமே :) 

- இராமகுரு

Saturday, January 18, 2014

மனம்

இருப்பதோ ஒரு மனம் 
இழந்தது பல மனம்
பிரிவது ஓர் உயிர்
பிரிந்தால் பல மைல்
புரிந்துகொண்ட மனமும் 
புரிந்துகொள்கிற குணமுமே என் உறவுகள் !
துடிப்பது இதயம் எம் 
வாழ்வில் தேவை புது உதயம் 
அனாதை மனதை 
ஆதரிக்கும் அன்பே 

அன்னை 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Thursday, January 16, 2014

வருவேன் எழுவேன் !

வழியென்று குழிக்குள் விழுந்தேன்
பாவமென்று சிலரும்
பரிதாபமென்று சிலரும்
குருடனென்று சிலரும்
அறிவிழந்தவனென்று சிலரும் கூற
கைகொடுத்து காப்பாற்ற மனமில்லை எவர்க்கும் !!!

குழிகள் பலவுண்டு
வழுக்கிவிழ வழிகளுண்டு
வார்தைகள்விழ வாய்களுண்டு

உணர்ந்தேன் இன்று,
தோள்கொடுக்க தோழனுண்டு
எழுந்துவர மனமுமுண்டு

விழுந்தவனுக்குதான் எழுவதன் கடினம் புரியும்
நீங்களும் விழலாம் , நான் இருக்கிறேன்
கைகொடுக்க !

வருவேன் எழுவேன் !

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Saturday, January 11, 2014

சான் ஜோஸ்

எங்கள் பள்ளி சான் ஜோஸ்
என்று சொல்லி சந்தோஸ்(ஷம்)
பள்ளிக்கு மேல் நீ (சான் ஜோஸ்) எங்களுக்கு
பிள்ளைகளாய் நாங்கள் உங்களுக்கு
அன்பை சேவையாய் செய்திட்ட நீங்கள்
சேவையை அன்பாய் செய்ய துடிக்கும் நாங்கள்
எவ்விடம் சென்றாலும் இவ்விடமிருந்தே சென்றது
அவ்விடம் இருந்தாலும் இவ்விடத்திற்கோ மனம் துடிக்குது

கடவுளை காட்டியது நீங்கள்
கல்வி கொடுத்தது நீங்கள்
கனவை காண்பித்தது நீங்கள்

ஊட்டி வளர்த்த பிள்ளையை
ஊர் மேச்ச உளமாற வாழ்த்தும் தாயாய்

வழிகாட்டும் குருவுக்கு மேலாய்
கை பிடித்து வழிநடத்தும் தந்தையாய்

நீங்கள் தந்தது சொல்லி மாளாது

நீங்கள் தந்தது இன்றி
எங்களிடம் இருப்பது நன்றி
மட்டுமே !!

 - இராமகுரு ராதாகிருஷ்ணன்


Tuesday, December 24, 2013

நக்ஷத்திரா !

என் வானில் என்றும் நீ ஒரு
நக்ஷத்திரம் - வாழ் நக்ஷத்திரம்

பல ஒளியாண்டு தொலைவில் இருக்கும் நீ ஒரு
நக்ஷத்திரம் - எட்டா நக்ஷத்திரம்

இன்று ஈன்றாய் நீ ஒரு நக்ஷத்திரம் !

அந்த நக்ஷத்திரா
அழகு நக்ஷத்திரமாக
அறிவு நக்ஷத்திரமாக
என்றும் ஒளியோடு
என்றும் குளிர்ந்த நக்ஷத்திரமாக
மின்னிக்கொண்டே இருக்கவேண்டும்!

- இராமகுரு

Friday, December 20, 2013

எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

பள்ளிப் புத்தகத்தில்
பால் முகம் தெரியும் பொது
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

எந்நாளும் நன்நாளாய்
என்றும் நிலைத்திட
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

மூடிய கண்கள்
மூடி மட்டுமே இருக்க
உறக்கம் வர
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

துக்கம் துறத்தி வர
விழும் கண்ணீரை
விழியோடு துடைக்க
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

மாலை பொழுதில்
முத்தமொன்று தந்துவிட
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
ஆதலால்
உன்னை கொஞ்சம் வேண்டும் நான் !

- இராமகுரு ராதாகிருஷ்ணன்