என் பிள்ளை கண்ணுறங்க ஆராரோ
என் பாட்டுக்கு கண்ணுறங்க ஆராரோ
நாளையும் நமதேன்று ஆராரோ
நல்ல நாளும் நமதேன்று ஆராரோ
கவலைகள் மறந்துறங்க ஆராரோ
கனவுகள் கண்டுறங்க ஆராரோ
வலிகளை மறந்துறங்க ஆராரோ
வழியொன்று வருமென்றுறங்க ஆராரோ
சிறுப்பிள்ளைபோல் சிரித்துறங்க ஆராரோ
உலகம் உனதென்றுறங்க ஆராரோ
செல்வங்கள் பெரிதல்ல ஆராரோ
சேர்க்கும் சொந்தங்களே ஆராரோ
நான் இருக்க நீயுறங்க ஆராரோ
நீ இல்லாமல் நானெங்கு போவேனோ?!
போனது போகட்டும் ஆரிரரோ
என்றும் போர் குணம் வேண்டாம் ஆரிரரோ
வாழ்வதும் ஓர் வாழ்கை ஆரிரரோ
பிறர் வாழ விழலாம் ஆரிரரோ
சொத்துன்ன சுகமேன்ன ஆரிரரோ
சிரிப்புக்கு விலையுண்டா ஆரிரரோ
சித்திரம் பேசுமடீ ஆரிரரோ
என் சித்திரம் நீதானே ஆரிரரோ
பக்குவம் வேண்டுமடீ ஆரிரரோ
பாதுகாக்க பழகிக்கொள் ஆரிரரோ
சிக்கனம் சிறுமையல்ல ஆரிரரோ
சிந்திக்க மறக்காதே ஆரிரரோ
நீ இருக்க நானுறங்க ஆரிரரோ
நான் இருக்க நீ எங்கும் போவாயோ?
- இராமகுரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment