Showing posts with label Kirukkal. Show all posts
Showing posts with label Kirukkal. Show all posts

Tuesday, April 14, 2020

நாயர் சாரே

ஞாயிறாய் இருந்த நாயர் சாரே,
எங்கள் ஞான குருவே நாயர் சாரே,
பிள்ளைப்போல் பார்த்தாய் நாயர் சாரே,
காட்டிய வழியே சென்றோம் நாயர் சாரே,
வழி எங்கும் துணைநின்றாய் நாயர் சாரே,
விழி நீரை துடைத்திட்டாய் நாயர் சாரே, 
வாழ்க்கையை கற்றுத் தந்தாய் நாயர் சாரே, 
பலர் இன்று வாழ்வதும் உன்னாலே நாயர் சாரே, 
பெற்ற பேரெல்லாம் உனதாகும் நாயர் சாரே, 
எங்களை விட்டு எங்கு சென்றாய் நாயர் சாரே, 
ஏக்கங்கள் தீரவில்லை நாயர் சாரே,
என்றாவது நீ வருவாயா நாயர் சாரே??? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Saturday, January 18, 2014

மனம்

இருப்பதோ ஒரு மனம் 
இழந்தது பல மனம்
பிரிவது ஓர் உயிர்
பிரிந்தால் பல மைல்
புரிந்துகொண்ட மனமும் 
புரிந்துகொள்கிற குணமுமே என் உறவுகள் !
துடிப்பது இதயம் எம் 
வாழ்வில் தேவை புது உதயம் 
அனாதை மனதை 
ஆதரிக்கும் அன்பே 

அன்னை 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Thursday, January 16, 2014

வருவேன் எழுவேன் !

வழியென்று குழிக்குள் விழுந்தேன்
பாவமென்று சிலரும்
பரிதாபமென்று சிலரும்
குருடனென்று சிலரும்
அறிவிழந்தவனென்று சிலரும் கூற
கைகொடுத்து காப்பாற்ற மனமில்லை எவர்க்கும் !!!

குழிகள் பலவுண்டு
வழுக்கிவிழ வழிகளுண்டு
வார்தைகள்விழ வாய்களுண்டு

உணர்ந்தேன் இன்று,
தோள்கொடுக்க தோழனுண்டு
எழுந்துவர மனமுமுண்டு

விழுந்தவனுக்குதான் எழுவதன் கடினம் புரியும்
நீங்களும் விழலாம் , நான் இருக்கிறேன்
கைகொடுக்க !

வருவேன் எழுவேன் !

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Saturday, January 11, 2014

சான் ஜோஸ்

எங்கள் பள்ளி சான் ஜோஸ்
என்று சொல்லி சந்தோஸ்(ஷம்)
பள்ளிக்கு மேல் நீ (சான் ஜோஸ்) எங்களுக்கு
பிள்ளைகளாய் நாங்கள் உங்களுக்கு
அன்பை சேவையாய் செய்திட்ட நீங்கள்
சேவையை அன்பாய் செய்ய துடிக்கும் நாங்கள்
எவ்விடம் சென்றாலும் இவ்விடமிருந்தே சென்றது
அவ்விடம் இருந்தாலும் இவ்விடத்திற்கோ மனம் துடிக்குது

கடவுளை காட்டியது நீங்கள்
கல்வி கொடுத்தது நீங்கள்
கனவை காண்பித்தது நீங்கள்

ஊட்டி வளர்த்த பிள்ளையை
ஊர் மேச்ச உளமாற வாழ்த்தும் தாயாய்

வழிகாட்டும் குருவுக்கு மேலாய்
கை பிடித்து வழிநடத்தும் தந்தையாய்

நீங்கள் தந்தது சொல்லி மாளாது

நீங்கள் தந்தது இன்றி
எங்களிடம் இருப்பது நன்றி
மட்டுமே !!

 - இராமகுரு ராதாகிருஷ்ணன்


Tuesday, December 24, 2013

நக்ஷத்திரா !

என் வானில் என்றும் நீ ஒரு
நக்ஷத்திரம் - வாழ் நக்ஷத்திரம்

பல ஒளியாண்டு தொலைவில் இருக்கும் நீ ஒரு
நக்ஷத்திரம் - எட்டா நக்ஷத்திரம்

இன்று ஈன்றாய் நீ ஒரு நக்ஷத்திரம் !

அந்த நக்ஷத்திரா
அழகு நக்ஷத்திரமாக
அறிவு நக்ஷத்திரமாக
என்றும் ஒளியோடு
என்றும் குளிர்ந்த நக்ஷத்திரமாக
மின்னிக்கொண்டே இருக்கவேண்டும்!

- இராமகுரு

Friday, December 20, 2013

எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

பள்ளிப் புத்தகத்தில்
பால் முகம் தெரியும் பொது
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

எந்நாளும் நன்நாளாய்
என்றும் நிலைத்திட
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

மூடிய கண்கள்
மூடி மட்டுமே இருக்க
உறக்கம் வர
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

துக்கம் துறத்தி வர
விழும் கண்ணீரை
விழியோடு துடைக்க
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

மாலை பொழுதில்
முத்தமொன்று தந்துவிட
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !

எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
எனக்கு கொஞ்சம் வேண்டும் நீ !
ஆதலால்
உன்னை கொஞ்சம் வேண்டும் நான் !

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Thursday, December 12, 2013

கிறுக்கல் !

முயற்சி :

முயல்வது மட்டும் முயற்சியல்ல 
முடியும் வரை முயல்வதே முயற்சி !

நண்பன் :

என் கண்ணுக்குள் என் நண்பன் ,
என் சிரிப்பின் சந்தம் என் நண்பன் ,
என் வெற்றியின் வலிமை என் நண்பன் ,
என் தோல்வியில் துணை என் நண்பன் ,
என் கனவுக்கு கண் என் நண்பன்,
.............
உன்னை போல் நண்பன் - உலகில் 
இனி உண்டோ ?
பிறர் வாழ பிரிந்தோம்
நீ வாழ துடித்தேன்
நான் வாழ தேய்ந்தாய்
நாம் வாழ்க நலமாக !!!!


கடல் :

உலகில் முக்கால் நீ என்றே 
என் முக்கண்ணன் உன்னில் தோன்றினான் 
உன் காதல் சந்திரன் 
காணவந்தால் 
காற்றோடு (காதல்) அலை வீசும் நீதான் 
உனை மறந்து ஒருநாள் போனால் 
ஆவேசத்தோடு உள்வாங்குவாய் 
இந்த சாபம் உனக்கு 
எம் தமிழ்ச் சங்கங்களை விழுங்கியதாலோ !?!?


- இராமகுரு