Showing posts with label Molu. Show all posts
Showing posts with label Molu. Show all posts

Wednesday, July 8, 2020

நீயும் நானும்

கண்ணில் நீர் ஏனோ? 
காரணம் தான் என்னவோ!?

நெஞ்சில் நீ இருப்பதால்,
நினைவலைகள் தான் இழுக்குமோ?

பாசம் நான் வைத்ததால்,
பாவமாக நிற்கிறேன்.

அன்பு நாம் கொள்ள,
அறியாதோர் என் செய்வார்? 

தங்கையாய் தாயாய் தோன்றினாய்,
தந்தைப்போல் தந்தப்பாசம் தெரியலையோ?

அண்ணா என்றழைத்த குரல்,
அமைதியாக அழுகுதம்மா!!!

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Friday, May 1, 2020

நம் சார்பியல்

காத்திருந்தேன் பல மணி நேரம்,
நீ சொல்லும் சில வார்த்தைக்காக.
பார்த்திருந்தேன் பல மணி நேரம்,
நீ காட்டும் கள்ளமில்லா பாசத்திற்காக.
விழித்திருந்தேன் பல மணி நேரம்,
நீ விழி மூடி கண்ணுறங்க.
மௌனித்திருந்தேன் பல மணி நேரம்,
நீ மௌனத்தை கழைப்பாயென்று.
எதிர்பார்த்திருந்தேன் பல மணி நேரம்,
நீ வந்துவிட மாட்டாயாயென்று.
....
பல மணி நேரமும், சில நொடியானது, 
உன் நினைவுகள் மனத்திரையில் ஒளிப்பரப்பானதால். 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 28, 2020

என் (கவிப்)பயணம்

காகிதத்தில் கிருகினேன்,
கவிதைகள் பல எழுதினேன்.
காகிதங்கள் கடந்துவிடும்,
கவிதைகள் நம்மோடு கலந்துவிடும்.
காதல் வந்தால் கவிதை வரும்,
கொஞ்சம் காத்திருந்தால் கவிதை பொங்கும்.
முதல் கவிதை தேர்வு தாளில்,
தொடரும் நான் வாழும் நாளில்.

ரம்யமாய் கவிதை வேண்டி,
அட்சயா பாடி ஆட அதுதொடர,
சோகமும், சோர்வும், 
பழியும், பாவமும் கடந்து
வருவேன் எழுவேன்,
பாசமும், பறிவும், 
ஊக்கமும், உண்மையும்,
தேக்கமும், தெளிவும்,
வருமா‌ வருமா என பறக்க நினைத்து,
மறத்துப்போன கவிதையாக,
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்,
என் தம்பி எனும் படைக்காக்க,
என் தன்னம்பிக்கை உயிர்பெற்று உயர,
மோலு எனும் மேலுலக தேவதை,
விண்ணிலிருந்து வந்து விதி மாற்றி,
என்னிலிருந்து எனை மாற்றினால்.

(தன்யா) தனியாய் புரிந்தது பலர் பாசம்,
பெரிதாய் தெரிந்தது பலர் தியாகம்,
பதினெட்டாம் படிக்காரன் படியளக்க,
பதினெட்டை பெற்று பழையதை பாதுகாக்க,
பதினெட்டில் கிடைத்த பக்குவ பைங்கிளி,
அமைதியாய் ஆனால் அம்முவாய்.

தொடர்கிறது கவிதை,
கரோனா கொடுத்த விடுப்பு
கற்று தரும் உலகில் பல பொறுப்பு.

-இராமகுரு ராதாகிருஷ்ணன்

Friday, April 24, 2020

மகளாய் பிறப்பாய்!!!

மகளாய் பிறப்பாய், 
என் பெண்ணே உன்னைகாண.
மகளாய் பிறப்பாய், 
உன் புன்னகையில் பசியாற.
மகளாய் பிறப்பாய், 
என் மடியில் நீ உறங்கிட. 
மகளாய் பிறப்பாய், 
உன் மழலை சொல் கேட்டிட. 
மகளாய் பிறப்பாய், 
உன்னை என் மார்பில் வளர்த்திட.
மகளாய் பிறப்பாய், 
உன் பள்ளிப்பாடம் கேட்டிட.
மகளாய் பிறப்பாய், 
என் சாதனைகளுக்கு சாட்சியாய்.
மகளாய் பிறப்பாய், 
நீ பெண்ணாய் பூத்திட.
மகளாய் பிறப்பாய், 
உன்னை மனமேடையில்  ஆசிர்வதிக்க.
மகளாய் பிறப்பாய்,
நம் மனதோடு பேசிட.
மகளாய் பிறப்பாய், 
உன் குழந்தைகளை கொஞ்சிட.
மகளாய் பிறப்பாய்,
உன்னை சாதனை மங்கையாய் காண.
மகளாய் பிறப்பாய், 
எனக்கு இரு சொட்டு கண்ணீர்விட. 
மகளாய் பிறப்பாய், 
உன் மகனாக நான் பிறக்க. 
மகளாய் பிறப்பாய் மகளே!!!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 14, 2020

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் 
உன்னை சுமந்து உலகை சுற்றிவர 

நான் இருக்கிறேன்
சுற்றிவரும் உலகை உனக்கு சொந்தமாக

நான் இருக்கிறேன்
சொந்தங்கள் உன்னை சோர்வுற செய்தாலும்

நான் இருக்கிறேன்
சோர்வுற்ற உன்னை சிரிப்பூட்ட எழவைக்க 

நான் இருக்கிறேன்
ஏழ நினைக்கும் உனக்கு ஏணியாய்

நான் இருக்கிறேன்
ஏணிகளை கடந்து சாதனைகள் செய்திட 

நான் இருக்கிறேன்
சாதனைகளும் சர்வ சாதாரனமென நீ உறக்கசொல்ல !!! 

நான் இருக்கிறேன்....

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Saturday, April 11, 2020

ஆராரோ ஆரிரரோ

என் பிள்ளை கண்ணுறங்க ஆராரோ 
என் பாட்டுக்கு கண்ணுறங்க ஆராரோ 
நாளையும் நமதேன்று ஆராரோ
நல்ல நாளும் நமதேன்று ஆராரோ
கவலைகள் மறந்துறங்க ஆராரோ
கனவுகள் கண்டுறங்க ஆராரோ 
வலிகளை மறந்துறங்க ஆராரோ
வழியொன்று வருமென்றுறங்க ஆராரோ
சிறுப்பிள்ளைபோல் சிரித்துறங்க ஆராரோ
உலகம் உனதென்றுறங்க ஆராரோ
செல்வங்கள் பெரிதல்ல ஆராரோ
சேர்க்கும் சொந்தங்களே ஆராரோ
நான் இருக்க நீயுறங்க ஆராரோ
நீ இல்லாமல் நானெங்கு போவேனோ?! 

போனது போகட்டும் ஆரிரரோ 
என்றும் போர் குணம் வேண்டாம் ஆரிரரோ
வாழ்வதும் ஓர் வாழ்கை ஆரிரரோ
பிறர் வாழ விழலாம் ஆரிரரோ
சொத்துன்ன சுகமேன்ன ஆரிரரோ
சிரிப்புக்கு விலையுண்டா ஆரிரரோ
சித்திரம் பேசுமடீ ஆரிரரோ
என் சித்திரம் நீதானே ஆரிரரோ
பக்குவம் வேண்டுமடீ ஆரிரரோ
பாதுகாக்க பழகிக்கொள் ஆரிரரோ
சிக்கனம் சிறுமையல்ல ஆரிரரோ
சிந்திக்க மறக்காதே ஆரிரரோ
நீ இருக்க நானுறங்க ஆரிரரோ
நான் இருக்க நீ எங்கும் போவாயோ? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Wednesday, April 12, 2017

என் தங்கை

எங்கிறந்தோ வந்தால் - என் வாழ்வில்,
ஏணியாய் இன்று,
என் கனவை சுமக்கும்
தாயாய் இன்று,
கவலைகளை காற்றாய்
கருணையை ஊற்றாய்
அளவற்ற அன்பை ஆறுபோல்
குறைவற்ற குனவதியாய்
பிரியமுடன்
த்தீ.

- இராமகுரு ராதாகிருஷ்ணன்