தாய்த்தமிழ்
இராமகுரு ராதாகிருஷ்ணன்,
தமிழ் வளர் மன்றம்
தமிழ் வளர் மன்றம் - 2014-ம் ஆண்டு சிந்தனையில் தோன்றிய ஒரு சிறு-முயற்சி. தமிழ் மொழியின் சிறப்பு, அதன் இலக்கண இலக்கிய வளம், அதன் தொன்மை போன்ற விடயங்கள் அனைவரும் அறிந்ததே என்ற எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. அப்படி பலர் இந்த விடயங்கள் அறிந்தோ தெரிந்தோ இருந்தாலும் அவை முழுமையானவை அல்ல.
தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழ் உலகில் தோன்றிய முதல்-மொழி, தமிழர் உலகின் மூத்த குடிகள் என்பது உலகின் வேற்றுநாட்டவர் ஒப்புக்கொண்டாலும் கூட, நம் நாட்டின் பிறமொழி பேசும் மக்களோ, ஏன் தமிழ் மக்களே கூட சிலர் அதை ஏற்கும் தயக்கம் இருப்பதை மறுக்கமுடியாது.
கடந்த நான்கு ஆண்டுகளில், பலரிடம் நான் கற்று, தெரிந்து கொண்ட பல ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியூட்டும் விடயங்களை பகர்ந்து வந்துயிருக்கிறேன். தமிழ் மொழியானது எத்துணை அறிவியல், கலாச்சாரம் சார்ந்து தோன்றி வளர்ந்து வந்துள்ளது என்பது என்னை ஆச்சர்யப்படுத்தியது. தமிழ் மொழியையும் அதன் கலாச்சாரத்தியும் வேறோடு அழிக்க நடந்த முயற்சிகள் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
கடந்த ஆண்டுகளில் தமிழ் மொழி பற்றிய பேச்சு ஜல்லிக்கட்டு போராட்டம், கீழடி தொல்பொருள் ஆய்வு மற்றும் வேறு பல சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட சில விடயங்கள் மூலம் பரவலாகவே இருந்துள்ளது. கீழடி ஆய்வு பற்றிய செய்திகள் பொதுவெளிக்கு வந்தபின் "தமிழி" பற்றிய விவாதங்கள் மற்றும் ஆவணப்படங்கள் சமூக வலைதங்களில் அதிகரித்துள்ளன.
இந்த முயற்சியின் மூலம் தமிழ் மொழியின் தாய்த்தன்மை பற்றி தொல்பொருள் ஆய்வு, அறிவியல் கண்டுபிடுப்புகள், வானவியல், கணிதம், வணிகம், கட்டிடக்கலை, நிலமேலாண்மை, கலாச்சாரம், உலக மொழிகளுக்குள்ள ஒற்றுமை, உலக அரசியல் போக்கு போன்றவற்றை வைத்து ஒருசேர்ந்த ஆய்வை மேற்கொள்வதே நம் நோக்கம்.
மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு போன்ற மொழிகளுக்கு தாய் நம் தமிழ் மொழிதான். கொரியா மொழியிலும், கமரூன் மக்கள் பேசும் மொழியிலும், தமிழ் மொழியின் வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல, இலக்கணமும் தமிழ் மொழியை போன்றே உள்ளன. இரட்டைக்கிளவி தமிழ் மொழிக்கே உடைய ஒரு பண்பு. கமரூன் மக்கள் பேச்சுவழக்கில் இரட்டைக்கிளவியின் பயன்பாடு உள்ளது உற்றுக்கவனிக்கவேண்டியது அவசியம்.
என்னுடைய கடந்த ஆண்டுகளின் ஆராய்ச்சியின் போது அறிந்து உணர்ததை, பின்வருவன போன்று வகுத்து பகிர்கிறேன்.
- செம்மொழி அடிப்படை
- உலக செம்மொழிகள்
- இந்தியா அரசால் அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகள்
- உலக நாடுகள்
இலக்கியம்
குமரிக்கண்டம்
கீழடி
பொறுப்பாகாமை: இந்த பகிர்வில் வருவன எந்த ஒரு மொழி பேசும் நாட்டவரையும் இனத்தவரையும் புண்படுத்தும் நோக்கில் இல்லை. பலராலும் ஏற்றுக்கொண்ட, ஆராய்ச்சியாளர்களின் படைப்புகள் (கட்டுரை, ஆவணப்படம், புகைப்படம்), போன்ற எனக்கு முந்தைய ஆய்வுகளின் கண்டுப்பிடிப்புகளை ஒருசேர்ந்த பார்வை (Correlative Study) கொண்டு என்னுடைய கண்டுப்பிடிப்புகள், கருத்துக்கள் கொண்ட பகிர்வே இது.
No comments:
Post a Comment