Saturday, April 11, 2020

ஆராரோ ஆரிரரோ

என் பிள்ளை கண்ணுறங்க ஆராரோ 
என் பாட்டுக்கு கண்ணுறங்க ஆராரோ 
நாளையும் நமதேன்று ஆராரோ
நல்ல நாளும் நமதேன்று ஆராரோ
கவலைகள் மறந்துறங்க ஆராரோ
கனவுகள் கண்டுறங்க ஆராரோ 
வலிகளை மறந்துறங்க ஆராரோ
வழியொன்று வருமென்றுறங்க ஆராரோ
சிறுப்பிள்ளைபோல் சிரித்துறங்க ஆராரோ
உலகம் உனதென்றுறங்க ஆராரோ
செல்வங்கள் பெரிதல்ல ஆராரோ
சேர்க்கும் சொந்தங்களே ஆராரோ
நான் இருக்க நீயுறங்க ஆராரோ
நீ இல்லாமல் நானெங்கு போவேனோ?! 

போனது போகட்டும் ஆரிரரோ 
என்றும் போர் குணம் வேண்டாம் ஆரிரரோ
வாழ்வதும் ஓர் வாழ்கை ஆரிரரோ
பிறர் வாழ விழலாம் ஆரிரரோ
சொத்துன்ன சுகமேன்ன ஆரிரரோ
சிரிப்புக்கு விலையுண்டா ஆரிரரோ
சித்திரம் பேசுமடீ ஆரிரரோ
என் சித்திரம் நீதானே ஆரிரரோ
பக்குவம் வேண்டுமடீ ஆரிரரோ
பாதுகாக்க பழகிக்கொள் ஆரிரரோ
சிக்கனம் சிறுமையல்ல ஆரிரரோ
சிந்திக்க மறக்காதே ஆரிரரோ
நீ இருக்க நானுறங்க ஆரிரரோ
நான் இருக்க நீ எங்கும் போவாயோ? 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

Tuesday, April 7, 2020

நாயர் சார்

சிந்திக்க கற்றுதந்தாய்
சிறகடித்துப் பறக்க சொல்லித்தந்தாய்,
எண்ணங்களே உயர்வுயென்றாய்,
கற்றதை கற்பிக்க சொன்னாய், 
கற்பித்தலும் கற்றலாகுமேன உணர்தினாய்,
வாடி நின்ற போது, வாசல் வந்தாய், 
தேடி நின்றோர்க்கு தோல்களை தந்தாய்.


- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

Monday, April 6, 2020

தனி-யா ?

உன் பாசம் எனக்கு புரியாமல் இல்லை,
என் பாசம் உனக்கு கிடைகாமலும் இல்லை

அப்போது இருந்து எனக்கு,
இப்போது போல், உன்னிடம்
பாசத்தை காட்ட தெரியவில்லை!!!

இப்போது இருக்கும் உனக்கோ
அப்போது போல், என்னிடம்
பாசத்தை காட்ட விருப்பமில்லை!!!

நீ துடைத்த என் கண்ணாடிக்கும்,
நான் தந்து 
நீ அணிந்திருந்த அந்த சங்கிலிக்கும், 
நம் பாசம்
தெரியும்,
புரியும்,

நான் தனி-யா?
உன் நினைவுகள் உள்ளவரை தனி இல்லை
என் தன்யா !!! 

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

அண்ணாவின் அம்மூ

 பலருக்கு நான் மற்றுமொரு அண்ணன்,
 பாடும் உனக்கோ நான் ஒரே அண்ணன்.
 உணவுகளால் இணைந்த நம் உறவு,
 உணர்வுகளால் இன்று வளர்ந்த உறவு.
 "சாப்டேன் , நீ சாப்டியா?", என்று
 நீ கேட்காமல் கழிவதில்லை பொழுதும்,
 உன்னிடம் நான் செய்வதை சொல்லாமல்,
 இருந்ததில்லை ஒரு பொழுதும்.
 பிறருக்கோ நீ என் தங்கை - இந்தக் கவி
 பாடும் எனக்குத்தான் தெரியும் நீ "என் மகளேன்று"!!!

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

 

Wednesday, April 1, 2020

அம்மூ


அமைதியான அழகி
ஆடம்பரமில்லா அசல்
இயல்பான இனியாள்
ஈடுயில்லா இயற்கையாள் 
உண்மையான உறுதுணை
ஊக்க மருந்தானா உனக்கு
என்றும்
ஏறுமுகமே 
ஐயமில்லா அதிர்ஷ்டகாரி 
ஒப்பில்லா நீ
ஓட்டம் நிற்காமல் ஒளிர்வாய் 
ஔவை துணை நிற்பாள்
அம் மூ 
அஹ அஹ !!!!!

- அண்ணா (இராமகுரு ராதாகிருஷ்ணன்)