செம்மொழி

செம்மொழி 

இராமகுரு ராதாகிருஷ்ணன், 
தமிழ் வளர் மன்றம்


உலக செம்மொழிகள் 

உலகில் 7000-த்திற்கு மேற்பட்ட மொழிகள் இன்றளவில் உள்ளன. 
பலராலும் உலகின் செம்மொழி என்று உலகளவில் 8 மொழிகளை குறிப்பிடுகின்றனர்.

1. தமிழ் 
2. சமஸ்கிருதம் 
3. சீனம்  
4. லத்தீன் 
5. கிரேக்கம் 
6. ஹீப்ரு
7. அரபி 
8. பாரசீகம் 

இந்தியாவின் செம்மொழிகள் 

2004-ம் ஆண்டு, இந்தியா அரசால் மொழிகளுக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.  இந்தனை தொடர்ந்து, முதலில் "தமிழ்" மொழிக்கு 2004 ஆண்டு செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

இன்றளவில், தமிழ் அல்லாது ஐந்து மொழிகளுக்கு செம்மொழி என்ற பெருமைமிகு அங்கீகாரம் இந்தியா அரசால் அளிக்கப்பட்டுள்ளது. 
சமஸ்கிருதம் (2005), கன்னடம் (2008), தெலுங்கு (2008), மலையாளம் (2013), ஓடியா (2014)  

வேறு மொழி மாநிலத்தவரும் தங்கள் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்க இந்தியா அரசிடம் முயற்சித்தபோது, பல விவாதங்கள் சமூக ஊடகங்களில் தோன்றி மறைய, இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கலாச்சார அமைச்சகத்தின் "Criteria for Declaring Classical Language" ("செம்மொழி அங்கீகார அடிப்படை") என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.[1]



செம்மொழியின் கோட்ப்பாடு 
  1. தொன்மை 
  2. தனித்தன்மை 
  3. பொதுமைப் பண்பு 
  4. நடுவு நிலைமை 
  5. தாய்மைத் தன்மை 
  6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு 
  7. பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை 
  8. இலக்கிய வளம் 
  9. உயர்சிந்தனை 
  10. கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு 
  11. மொழிக் கோட்பாடு 



[1] Press Information Bureau. Government of India. Ministry of Culture. Criteria for Declaring Classical Language. Dated : 05-February-2014. Click Here 

No comments:

Post a Comment