Sunday, June 2, 2013

என் அக்ஷயப் பாத்திரம்

என் மேல் விழுந்த மழைத் துளி - நீதான் 
என் வானில் மின்னலாய் வந்துப்போனதும் - நீதான் 
நான் கேட்டு ரசித்த பாடலை 
நானும் நீயும் சேருந்து பாடியநொடி 
உன் நினைவுக் கடலில் முழ்கி இறந்துபோனதோ  !

உன் நினைவுக்கு
நினைவிருந்தால்.........
தெருவில் நீ வேண்டாவெறுப்பாய் 
விசி சென்ற நாம் காதல் குப்பையை 
மீண்டும்
அலமாரியில் வைத்து 
அழகு பார்க்க ஆசை வைத்தது 
ஆசை காட்டியது - நீதான் 
நீமட்டும் தான் !

உன் பலமே பலவினமானது 
அது சிலருக்கு பலமானது !
மாங்கனி வேண்டி நீ சுற்றிய மரம் 
பலாமரமேன்று உனக்கு தெரியவில்லையா 

கேட்டது எல்லாம் தரும் அக்ஷயப் பாத்திரம் நீ 
என்னிடம் இருந்து பாத்திரத்தை எடுத்துபோனான ??
எது எப்படியோ 
அக்ஷயா உன்னை இழந்த நான் 
பாத்திரம் துழைந்த பிச்சைக்காரன்.

பாத்திரம் வேறு கைக்குள் 
அகப்பட்டது அதற்கு ஆனந்தமா அழுகையா ?
விடை தெரியாமல் இருப்பதுதான் விதி!!!

இராமகுரு 
  

No comments:

Post a Comment