சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.
மேற்கூரிய பாரதியாரின் வாய்மொழி வெறும் வரிகளாகத்தான் இருக்கிறதோ!
இந்த பதிவின் முலம் நான் மனதில் தோன்றிய பின்பங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கல்வி கண் கொடுக்கும் என்று அனைவரும் அறிந்ததே. கல்வி ஒருவருக்கு பகுத்தறிவைக் கற்றுத்தரவேண்டும்.
நாம் கேட்கும் கருத்தை, படிக்கும் பல, காணும் காட்சிகளின் உண்மை பொய்மை தன்மையை பிரித்தரியும் அறிவு நம்மில் பலருக்கு உண்டா என்று எனக்கு அவ்வப்போது தோன்றும்.
தொலைகாட்சியிலும் , தினசரி நாள்ழிததிலும் நாம் "இளம்பெண்ணோ ஆண்னோ சாதி மாறி காதலித்தால் பெற்றோர்களால் கொல்லப்பட்டனர் " என படித்தும் கண்டதும் உண்டு. நம்மில் பலர் அவர்களை சாதி வெறியர்கள் என்று பெயர் சுட்டி பாராட்டுப் பத்திரம் படித்ததுண்டு.
ஆனால் படித்த பலர் தங்கள் தினசரி வாழ்வில் தெரிந்தும், சிலர் தெரியாமலும் மேற்கூரிய "சாதி" என்னும் நம்பிக்கைக்கு பாசம் காட்டித்தான் வருகிறார்கள்.
உலகில் மதம் மாறிய பலரை நீங்களும் நானும் சந்தித்ததுண்டு, சாதி மாறிய ஒருவரையும் நான் கண்டதில்லை !!! அது தான் சாதி...... இல்லாதது போல் தோன்றினாலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
படிக்காமல் பட்டிகாட்டில் இருந்து தங்கள் பாட்டனார் முப்பாட்டனார் வாழக்கை முறைகளை கண்டு சாதி விரும்பும் அவர்களை விட " convent" பள்ளியில் படித்து, உலக வாழக்கை முறைகளின் மாற்றத்தை தம் வாழ்வில் மாற்றிக் கொள்ளகூடிய "modern youth" எனப்படும் இன்றிய இளயபாரதம் இன்னும் சாதியை எப்போதாவது பின்பற்றுமானால் அவர்கள் தான் உண்மையிலேயே சாதி வெறியர்கள். அவர்களுக்கு "கல்வி இருந்து பயனில்லை".
நாம் பழகும் ஒருவர் நம்மை சார்ந்து இருக்க வேண்டுமே தவிர நம் சாதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது என்னை பொருத்தமட்டில் தவறுதான் :)
No comments:
Post a Comment