உங்களை கண்டது இரு முறை
உங்கள் தாக்கமோ வாழும்வரை !
காந்தியம் பற்றி கேட்டதுண்டு
உங்களை கண்டு உணர்ந்ததுண்டு
காந்தி ஜெயந்தி அன்று எங்களை பிரிந்து
காந்தி உடன் இணைதீர்கள்
கொங்கு மண்டலத்தில் நீங்கள் மகா-சக்தி
உங்கள் வாழ்வு எங்களுக்கு தரும் மகா-சக்தி
பொருட்செல்வர் நீங்கள் - அதை கொடுத்ததால்
அருட்செல்வர் நீங்கள் !
நீங்கள் கொடுத்தது பொருள் மட்டுமா?
கல்வி, அது தரும் தொழில்
அரசியல் அதற்கு மேல் ஆன்மிகம்
உம்மை எழுத வயதுமில்லை வார்த்தையுமில்லை
உம் புகழ் வாழிய பல்லாண்டு
- இராமகுரு ராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment