எதிர்காலம்..,
நிகழ்காலம் நிஜமானவர்களின்
ஏழாம் அறிவின் எழுச்சி!!!
" அ...ஆ.. இ.."
பாடம் படிக்கிறேன்... நான் !!!!
கண்களில் ஏக்கம்
கனவுகளின் துரத்தல்
சலனமில்லா ஒரு இரைச்சல்
கையில் உலகம்
உணர்வுகளின் நெருக்கடி
வாழ்க்கையின் எழுதுகோல்
இசையின் அரவணைப்பு
சுவாசத்திலும் சுகம்
தாயின் முதல் முத்தம்
தவிப்புகளின் தாரக மந்திரம்
......................................,
" தம்பி சீக்கிரம் கிளம்பு
வேலைக்கு time ஆயிடுச்சு "ஆச்சர்யத்தில் கண் விழித்தேன்
அம்மாவின் அழகிய அறிவிப்பு !!!
கண்களின் பிம்பத்தில்
(என்) ஓலைக்குடிசையின் உயிரோட்டம்....
ஆம்..........
"கல்வி"
எனக்கு ஓர் பகல் கனவு ....
எட்டாத ஓர் உணர்வு....
இருளின் நாடகத்தில்
நினைவுகளும் கவிஞனாக்கிவிட்டது
"கல்வி" எனும் எழுதுகோல் கையில் ...,
" இதோ வந்துட்டேன் அம்மா !!!"
அனிச்சைசெயலாய் அத்தனையும்..,
இரவுகளுக்காக காத்திருக்கிறேன்
இன்று
அடுத்த பக்கத்தில் "அப்துல் கலாம்"..,
கானல் நீராய் என் "கல்வி"
மூளையின் முதுகெலும்பில்
முளைத்திட்ட ஓர் விதை !!!
என்ன செய்ய
படிக்கும் வயதில்
நான்
பால் வியாபாரி !!!
நடக்கிறேன்
வழக்கமான பயணம்
கனக்கிறது..,
கையில் ஏற்றிய பாரமல்ல
நினைவுக்கூட்டில்
என் கனவுப் புத்தகங்கள் !!!
"வருகிறேன் அம்மா"
வாடகை இல்லாதது
கரு(அ)வறை மட்டும்தானோ !!!
ஆழ்ந்த யோசனையில்
இன்றைய நாள்...
கை கொடுக்க வேண்டாம்
'கல்வி' கொடுங்கள் ...,
சாலையில் சந்தித்த மக்களிடம்
என் மனம் கேட்ட யாசகம் !!!
நிஜமாக்குமா !!! நிஜமாகுமா !!!
என் "கனவு"
" அம்மா பால் ............................... "
- லோகநாதன்
மரங்கள் நிறைந்த காடு !
மழைக்குபஞ்சமில்லா ஞாலம் !
மனித நேயமுள்ள மனம் !
சிசுக்கொலை இல்லா கிராமம்!
மதுபானக் கடை இல்லா தெருக்கள் !
குழந்தை தொழிலாளர் இல்ல சமூகம்!
விபத்தில்லா சாலைகள் !
வீதியெங்கும் மரங்கள் !
குப்பையில்லா வீதிகள் !
அனைவருக்கும் கல்வி !
சாதிகள் இல்லா சமூகம் !
யாசகர்கள் இல்லா கோயில்கள் !
புகையில்லா வாகனம் !
தூய்மையான காற்று !
வன்முறை இல்லா உலகம் !
லஞ்சமில்லா வாழ்கை !
அனாதைகளே இல்லா அகிலம் !
கடனில்லா இந்தியா!
சிட்டுக் குருவிகளின் சப்தம் !
இவை எல்லாம் ,
இனி கனவில் மட்டும் தானா ?
நிஜமாகுமா ?
மாற்றம் தேடியே ,
ஓர் பயணம் !!!
- பானு
No comments:
Post a Comment