கையளவு கையளவு மனசு
அதில் கடலளவு கடலளவு கனவு
நித்தம் போராட்டம் ஆடுகின்ற மனசோடு ஒப்பிட
அம்மம்மா பூமி ரொம்ப சிறுசு (2)
தாய் அன்பு காட்டுவதும் மனசு
பின்பு தள்ளி இரு என்பதுவும் மனசு
பூவாக காட்டுவதும் மனசு
தன்னை வேராக மறைப்பதுவும் மனசு
சுமைதாங்கி ஆனதுவும் மனசு
தனி சுமையாகி போனதுவும் மனசு
மனசாட்சி பேசுகின்ற மனசோடு எப்போதும் தாய் மனசு வாழுவது பெருசு
அம்மம்மா பூமி ரொம்ப சிறுசு
கையளவு கையளவு மனசு
அதில் கடலளவு கடலளவு கனவு
நித்தம் போராட்டம் ஆடுகின்ற மனசோடு ஒப்பிட
அம்மம்மா பூமி ரொம்ப சிறுசு (2)