வெப்பத்தின் தாக்கம் பலருக்கு வெளியில் வரும் வரை தெரிவதில்லை, ஏனெனில் குளிர்சாதன அறைக்குள் இருந்து பழகிவிட்டோம். வருடங்கள் கடந்துசெல்ல செல்ல வெப்பம் அதிகரித்துகொண்டே போகிறது.
என்னது பள்ளிக்காலத்தில் நான் ஒட்டு வீட்டில் இருந்து இருக்கிறேன். இப்போதும் என் பாட்டி வீடு ஒட்டு வீடுதான், அவ்வப்போது அங்கு தங்கி வருகிறேன். என்னால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதை நன்றாக உணர்கிறேன்.
வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள, தங்களால் இயன்ற வசதிக்கு ஏற்ப வெளிநாட்டு குளிர்பானங்கள், இளநீர், சர்பத், கம்பங்கூள். இதில் இவை அனைத்தையும் நாம் தேடிசென்று பருக வேண்டும். ஐஸ் மட்டும் தான் அப்போதும் இப்போதும் நாம் வீடு தேடி வரும்
அன்றைய கால சூழ்நிலையில் பலரும் விரும்பி பெற்றது சேமிய ஐஸ் தான். இந்த பதிவை எழுதும் முன்னும் ஒரு சேமிய ஐஸ் - ஐ ருசித்து விட்டுதான் தொடங்கி---ன்
இந்த சமையத்தில் மற்றொரு மிக முக்கிய நிகழ்வையும் பகிர விரும்புகிறேன், அது இன்றைய கால விவாத பொருளாக உள்ளத்தால்.
பணமில்லா பொருளாதாரம்
ஆம், பணமில்லா பொருளாதாரம். இதற்கும் சேமிய ஐஸ்-கும் என்ன சம்பந்தம். மேற்குரியது போல என் இளைய வயதில் எங்கள் கிராமத்தில் இருந்தோம், கோடை கால பள்ளி விடுமுறையில் மதிய உணவுக்கு பிறகு "பாம் பாம்" என்றும், "ஐஸ் ஐஸ்" என்றும் வரும் ஒலிக்காக காத்திருப்போம்.
ஐஸ் வாங்க அனைவரிடமும் காசு இருக்காது, அப்போது ஐஸ் விற்கும் நபர் மிதிவண்டியின் கீழ்தளத்தில் ஒரு சாக்கு மூட்டை கட்டபட்டிற்கும். எதற்கு அது ?
நம்மிடம் உள்ள கண்ணாடி பாட்டில்களை எடைக்கு கொடுத்து, அதற்கு ஐஸ் வாங்கிகொள்ளலாம்.
இவரிடம் தான் பெரும்பாலும் பல ஆண்டுகளாக ஐஸ் வாங்கிவருகிறோம்.
நீங்களும் ஒரு சேமிய ஐஸ்-ஐ சுவைத்து மகிழுங்கள் !!!