கதை - பொய்
இப்போதைய இயந்திர வாழ்க்கை சக்கரத்தில் ஓடிக் கொண்டுஇருக்கும் பெற்றோர்களுக்கு ரம்யா என்ற ஒரு அழகு தேவதை. அந்த சிறு குழந்தை ஒன்றாம் வகுப்பு படிக்கிறது. திறமை மிக்க குழந்தை, திறமை உடன் படு சுட்டி. இவர்கள் இருப்பது தங்கள் பூர்வீக ஊர், ரம்யாவின் பெற்றோர் காதல் திருமணம்.
ரம்யா அதே ஊரில் உள்ள ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கொண்ட பள்ளியில் படிக்க, ரம்யாவின் தந்தை பழனிச்சாமிக்கு அதே ஊரில் புதிதாக திறக்க பட்ட பள்ளி உயர்வானது என்று கேள்விபட; மனம் உஞ்சலில் ஏரியது.
ரம்யா பள்ளியில் ஒரு நக்ஷத்ர குழந்தை. பள்ளி தோழிகள் முதல் ஆசிரியர், முதல்வர் வரை அறியபட்டவல்.
பழனிசாமியின் பிற நண்பர்கள் , உறவினர்கள் தங்களின் குழந்தைகளை புதிய பள்ளியில் அனுமதிக்க முடிவு செய்ததை அறிந்து. தானும் ரம்யாவை புதிய பள்ளியில் அனுமதித்தல் தான் தனக்கும் உயர்வாக இருக்கும் என்று தீர்மானிக்கிறான்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பின், பள்ளியில் இருந்து ரம்யாவின் வரவுகாக காத்திருக்கிறான். குழந்தைக்கே உரித்தான கள்ளமில்ல புன்னகை உடன் ரம்யா தன் அம்மாவின் கைகளை பற்றியபடி தன் புத்தக முடையை கழற்றி வைக்கிறாள்.
பழனிச்சாமி ரம்யாவை தன் மடியில் அமர்த்தி, " என் செல்லத்துக்கு என்ன வேணும் ?" என்று குழந்தைக்கு காக்கா பிடிக்க. குழந்தையோ தொலைகாட்சியில் "டோராவின் பயணங்கள்" நிகழ்ச்சியை உன்னிப்பாக ரசித்து கொண்டுஇருக்கிறாள். பழனிச்சாமி அந்த நிகழ்ச்சி எப்பொழுது முடியும் என்று பொறுமையுடன் இருக்கிறான்.
"சப்பா! இப்ப சொல்லு, என் செல்லத்துக்கு என்ன வேணும் ?". ரம்யா சிரித்தபடி, " ஒரு வெள்ளை நாய் குட்டி" என்ன தன் பிஞ்சு கைகளால் நாய் குட்டியை தழுவுவது போல செய்து காண்பிக்கிறாள்.
" அப்பா, ரம்யா குட்டிய புது ஸ்கூல்ல செத்தபோறேன்" என தந்திரமாக மேல மேல குழந்தையின் கன்னங்களை கிள்ளியவாறு கூறுகிறான். "
"அப்ப அங்க நித்ய, ப்ரீத்தி மிஸ் எல்லாம் இருப்பாங்களா?" என்று தனக்கு பிடித்தமான ஆசிரியர்களை பற்றி கேட்க, சற்றும் யோசிக்காமல் "இருப்பாங்க"னு , பொய் உறைகிறான் பழனிச்சாமி
"அய்யா, ஜாலி ஜாலி" வார்த்தைகள் வர, குழந்தையின் கண்ணில் தெரிந்தது அது தான் சொர்க்கம்.
"அப்பா உனக்கு, நாய் குட்டி வங்கி தரேன், நாளைக்கு நீ ஸ்கூல் ல உங்க , நீங்க வேற ஊருக்கு போரிங்கலன்னு கேட்ட?, ஆமாம்னு சொல்லணும்" என்று ரம்யாவிக்கு மெதுவாக பயிற்சி தருகிறான்.
"அப்பா, நம்ம வேற ஊருக்கு போறோமா?"என்று ஆவலுடன் ரம்யா வினாவ. "இல்லை", என்று தந்தி கூறுகிறான்.
"அப்புறம் என் பா நம்ம பொய் சொல்லணும்" என்றவுடன் என்ன சொல்லவதென்று தெரியாம, "நீ அப்படி சொன்னதான், உன்ன புது ஸ்கூல்ல சேக்க இந்த ஸ்கூல்ல TC தருவாங்க "
கருத்து : குழந்தைகளுக்கு முதல் ஆசான் பெற்றோர்களே !
பெரும்பாலான குழந்தைகள் பொய் சொல்ல கற்றுக்கொள்வது பெற்றோர்களிடமிருந்து தான் :(